கருப்பூர் அருகே டீக்கடை கதவை உடைத்து திருட்டு

கருப்பூர் அருகே டீக்கடை கதவை உடைத்து உள்ளே சென்று திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டை கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28).

இவர் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல வேலையை முடித்த அவர் இரவில் கடையை பூட்டிவிட்டு சென்றார்.  இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பணம் 2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசில் கார்த்திக் புகார் கொடுத்தார். அதன்பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com