வீட்டின் பூட்டை உடைத்து நகை, கேமரா, லேப்டாப் திருட்டு

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, கேமரா, லேப்டாப் திருட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
.
.
Published on

சேலம்:

சேலம் நரசோதிப்பட்டி உதயபுரி காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது52), விவசாயி. இவர் கடந்த 12-ந்  தேதி ராசிபுரம் பெரியமணலியில் உள்ள தனது தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றி–ருந்தார், இந்த நிலையில் நரசோதிப்பட்டியிலுள்ள அவரது  வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்திரகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த சந்திரகுமார் விரைந்து சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் லேப்டாப், கேமரா, வாட்ச் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com