சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை.
.
.
Published on

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 61). இவர் தனக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு தற்போது அரூர் பகுதியில் வசித்து வருகிறார். 

இன்று காலை அக்கம்பக்கத்தினர் இவரது வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக  இது குறித்து தமிழழகன்க்கு  தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது மனைவி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் ஆகிய பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.  

இதுகுறித்து  கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.    

X

Maalai Malar
www.maalaimalar.com