ஏற்காடு மலை கிராமத்தில் கிளை அஞ்சலகம் திறப்பு

ஏற்காட்டில் மலை கிராமத்தில் கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டபோது எடுத்த படம்.
கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டபோது எடுத்த படம்.
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகாவிற்குட்பட்ட, காக்கம்பாடி மலைக் கிராமத்தில் புதிய கிளை அஞ்சலகம் திறக்கப்பட்டது. காக்கம்பாடி, பில்லேரி, கிடாக்காடு, பெலாத்தூர் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்தில் கிளை அஞ்சலகம் திறக்க வேண்டும் என தபால் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று, காக்கம்பாடி கிராமத்தில் புதிய கிளை அஞ்சலகத்தினை, சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் திறந்து வைத்தார். பின்னர் அந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு, துவங்கப்பட்ட அஞ்சல் சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com