சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Published on

கருப்பூர்:

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனமும், சேலம் மறு வாழ்வு நிறுவனமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு முகாமை சேலம் 3 ரோட்டில் உள்ள மறுவாழ்வு நிறுவன வளாகத்தில் நடத்தின. சேலம் மறுவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் வாசுகி விஜயகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்நலத்துறையின் பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் நிபுணர் ஸ்ரீதேவி, சேலம் பேச்சு பயிற்சி மற்றும் செவித்திறன் பரிசோதனை மையத்தின் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். முகாமில் மாற்றுத்திறனாளிளுக்கு பயிற்சியும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. 

மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள், கலந்து கொண்டனர். முடிவில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் செவித்திறன் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர் ஹரி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com