ஆத்தூர் நகராட்சியில் வரி, கட்டணங்கள் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஆத்தூர் நகராட்சியில் வரி, கட்டணங்கள் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையாளர் கூறி உள்ளார்.
.
.
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஆத்தூர் நகராட்சிக்கு 2021-2022-ம் நிதியாண்டு வரை செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, நகராட்சி கடை வாடகை மற்றும் தொழில் லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்ட வரி மற்றும் கட்டண நிலுவை போன்றவற்றை இதுவரை செலுத்தாதவர்கள் ஆத்தூர் நகராட்சி கணினி வரி வசூல் மையங்களில் உடனடியாக செலுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்வதுடன் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும். மேலும் பொதுமக் களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வரிவசூல் மையங்களும் செயல்படும் இண்டர்நெட் மூலமாகவும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

பொதுமக்கள் அனை வரும் உடடினயாக வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி ஆத்தூர் நகராட்சி பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com