ஆத்தூர் அ.தி.மு.க. ஒன்றியக் குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தேதி ஒத்திவைப்பு

ஆத்தூர் அ.தி.மு.க. ஒன்றியக் குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
.
.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 13 உறுப்பினர்களை கொண்டது.  இதில் அ.தி.மு.க. 5, தே.மு.தி.க. 2, பாட்டாளி மக்கள் கட்சி 1, தி.மு.க. 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. கூட்டணி இணைந்து ஒன்றிய குழுத் தலைவராக லிங்கம்மாள் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தற்போது அ.தி.மு.க.வில் இருந்த 2 கவுன்சிலர்கள் தே.மு.தி.க. 2 பேர், பாட்டாளி மக்கள் கட்சி ஒன்று, தி.மு.க. 6 பேர் என மொத்தம் 11 உறுப்பினர்கள் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.  அதன் பேரில் இன்று கலெக்டர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான கூட்டம் நடை பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது தேர்தல் நடைமுறைகள் விதிமுறையில் உள்ளதால் இந்த தேர்தலை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா உத்தரவிட்டுள்ளார். ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றும் நிலையில் இருந்தது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com