சேலத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

சேலத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
.
.
Published on

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி அம்பானி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் விஷ்ணு (வயது 25).

 இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது திடீரென தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார்,

இவரது அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மற்றும்  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விஷ்ணுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விஷ்ணு குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இந்த  சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com