நங்கவள்ளி அருகே தந்தை-மகன் மீது தாக்குதல்

நங்கவள்ளி அருகே தந்தை-மகனை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
.
.
Published on

நங்கவள்ளி:

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள வனவாசியை சேர்ந்தவர் சித்தையன் (வயது55). இவர் சம்பவத்தன்று சந்தைபேட்டையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்ற சூர்யா, பாரதி ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சித்தையன் அவர்களை சமாதானம் செய்தார். இது பாரதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பாரதி, அவரது நண்பர்கள் காளிராஜ், சந்தோஷ்பூபதி, வெங்கடாசலபதி ஆகிய 4 பேர் சேர்ந்து சித்தையனை தாக்கியதாக தெரிகிறது.

தடுக்க வந்த அவரது மகன் முத்துக்குமாருக்கும் அடி விழுந்தது. அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com