டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
.
.
Published on

சேலம்:

2022-2023 கல்வி ஆண்டுக்கான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். 

இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் tancet.annauniv.edu என்ற இணையதளம் வழியாக ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான கடைசி தேதி இன்று என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்தனர். 

இந்த நிலையில் டான்செட் நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் முறையில் பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம், வருகிற 21-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை தமிழக அரசு டான்செட் செயலாளர் ஸ்ரீதரன் பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com