100 நாள் வேலைக்கான அட்டை வழங்ககோரி விவசாய தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

100 நாள் வேலைக்கான அட்டை வழங்ககோரி காடையாம்பட்டியில் இன்று விவசாய தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள்.
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சி பகுதி மக்களுக்கு 100 நாள் அட்டை வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு தாலுகா தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். வெண்ணிலா சசிகலா, லட்சுமி, திலகா, சக்தி, அம்பிகா, தமிழரசி, நல்லம்மாள் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் தங்கவேல் உள்பட மாவட்டத் துணைத் தலைவர், மாவட்ட செயலாளர் சின்ராஜ், வட்டச் செயலாளர் ஈஸ்வரன், ராஜா மற்றும்  100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com