பேளூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க. மோதல்-ஜன்னல் கண்ணாடி உடைப்பு

பேளூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் பேளூர் முதல் நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலா 6 வார்டுகளிலும், சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இன்று காலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது இதில். தி.மு.க. சார்பில் ஜெயசெல்வியும், அ.தி.மு.க. சார்பில் பரமேஸ்வரியும் போட்டியிட்டனர். அப்போது அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர் இடையே வாக்கு வாதம்&மோதல் ஏற்பட்டது. 

அப்போது அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி ராமு அறிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார், கூடியிருந்த இரு தரப்பினர் மற்றும் தொண்டர்களையும் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com