தலைவாசல் அருகே கட்டிட தொழிலாளி விபத்தில் பலி

தலைவாசல் அருகே கட்டிட தொழிலாளி விபத்தில் பலியானார்.
.
.
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் தாலுகா ராமநாயக்கபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 43). இவருடைய நண்பர் முருகன் (36). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள் ஆவர். 

இவர்கள் தலைவாசல் பகுதியில் கட்டிட வேலை முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். 

தலைவாசல் அடுத்து சார்வாய் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை வேலு, முருகன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலு பரிதாபமாக இறந்தார். 

முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com