கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

சேலத்தில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
கிணற்றில் இருந்து கோபிநாத் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.
கிணற்றில் இருந்து கோபிநாத் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.
Published on

சேலம்:

சேலம் சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகன் கோபிநாத் (வயது 29) கடைகளில் குளிர்பானம் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். 

பின்னர்  நண்பர்களுடன் புதுரோடு பகுதியில் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதனால் பதறிப்போன நண்பர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சூரமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அந்தக் கிணற்றில் இறங்கி தேடினர். அங்கு அதிக சகதி இருந்ததாலும்,  இரவு நேரம் ஆனதாலும்,  உடலை கண்டுபிடிக்க முடியவில்லை திரும்பிச் சென்றனர். 

பின்னர் இன்று காலை மீண்டும் கோபிநாத் உடலை  தேடி மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுபற்றி வழக்கு பதிவு செய்துதவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com