சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 504 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் இதுவரை 504 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு ஒரு லட்சத்து 26 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு 1,700-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 

இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள் உள்பட சிலர் கருப்பு பூஞ்சை என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 504 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் தற்போது 7 பேர் மட்டுமே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com