கைலாசநாதர் கோவிலில் 4-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் 4-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி சாமி திருவீதி உலா வந்த காட்சி.
விழாவையொட்டி சாமி திருவீதி உலா வந்த காட்சி.
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது.  அதன் 4ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கோவில் கோபுரங்களும், கொடிமரம் மற்றும் நான்குபுர மதில் சுவர்களும் வண்ண விளக்குகளாளும், தோரணங்களலும் சிறப்பாக அலங்கரிக்கபட்டிருந்தன.

கோவிலில் சிவகாம சுந்தரி உடனுறை   கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. மேலும் மாலை 5 மணியளவில்  சாமி திருவீதி உலா 4 வீதிகளிலும் வந்தது.

பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவில் தக்கார் சந்திரன், செயல் அலுவலர் அசோக்குமார், திருத்தேர் கமிட்டி உமாபதி குரு சாமிகள்,  மிராசுதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com