சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

தாரமங்கலம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
,
,
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகில் உள்ள  மல்லிக்குட்டை ஏரி பகுதியில் ஒரு கும்பல் அடிக்கடி சூதாட்டத்தில்  ஈடுபட்டு வருவதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

 இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு ஏரிப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 37), சரவணன் (30) மூர்த்தி (31), பாலகிருஷ்ணன் (34) ஆகியோரை பிடித்தனர். 

அவர்களிடம் இருந்து பணம் 1500- ம் , 4 மோட்டார் சைக்கிள்களும்  பறிமுதல் செய்தனர். மேலும்  தாரமங்கலம் போலீசார், வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com