சேலத்தில் தூக்கு போட்டு 2 பெண்கள் தற்கொலை

சேலத்தில் தூக்கு போட்டு 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
.
.
Published on

சேலம்:

சேலம் அழகாபுரம் பெரிய புதூர் ராமன் குட்டை  பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42).பீகார் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு சங்கீதா தேவி (வயது 38) என்ற மனைவியும் ராஜா( 16), கார்த்தி (15 )என்ற 2 மகன்களும் உள்ளனர்.

வினோத்குமார் டைல்ஸ் ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில்  டீ குடிப்பதற்காக வெளியே சென்ற வினோத்குமார் பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் சங்கீதா  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இது குறித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சங்கீதா தேவி உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சேலம் வ.உ,.சி  மார்க்கெட் அருகே உள்ள வால்மீகி தெருவைச் சேர்ந்தவர் தீபலட்சுமி (வயது 34). இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரை சேர்ந்த கோபால் என்பவருடன் திருமணமானது. கோபால் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

 இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபலட்சுமி வினோத்குமார் என்பவருடன் வசித்து வந்தார் சம்பவத்தன்று வீட்டில் இருந்த  தீபா லட்சுமி திடீரென தூக்குப்போட்டு கொண்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

 வழியிலேயே தீபலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாலட்சுமி தற்கொலைக்கு காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com