கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும் மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி
Published on

சேலம்:

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளான தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது.

தேவாலய கட்டிடம் கட்டி 10 முதல் 15 ஆண்டுகள் இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும் மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்க ளுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழி வுகளுடன் சிறுபான்மை யினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

நிதி உதவி 2 தவணை களாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com