11 மாதங்களுக்கு பின்னர் கைதான வாலிபர் சேலம் சிறையில் அடைப்பு

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
11 மாதங்களுக்கு பின்னர் கைதான வாலிபர் சேலம் சிறையில் அடைப்பு
Published on

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊ.மாரமங்கலம் ஊராட்சி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26 ). இவர் ஓமலூர் அருகே உள்ள பஞ்சகாளிப்பட்டி பகுதியில் பட்டு நெசவுத் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார். இதுபற்றி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யபப்ட்டது.

புகாரின் பேரில் மணி கண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடு வதை அறிந்த மணிகண்டன் இரவு நேரத்தில் சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டுவிட்டு சிறுமியின் அக்கா 19 வயது பெண்ணை கூட்டி சென்றார்.

இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்களுக்கு அடைகலம் கொடுத்த உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருப்பதாக அறிந்து அங்கு சென்ற போலீசார் பார்த்தபோது மணிகண்டன் நெசவு தொழிலில் செய்து வருவ தும், அவருடன் சென்ற சிறுமியின் அக்காள் அதே பகுதியில் தனியார் கம்பெ னிக்கு வேலைக்கு செல்வ தும் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்துவதும் தெரிய வந்தது.

இருவரையும் அழைத்து வந்த போலீசார் மணி கண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சம்ப வம் நடைபெற்று 11 மாதங்க ளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com