மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

சேலம்‌ அஸ்தம்பட்டி பகுதியைச்‌ சேர்ந்த சம்பந்தத்தின்‌ மகன்‌ கணேசன்‌ (36). இவர்கள்‌ இருவரும்‌ சேலம்‌ தனியார்‌ நிதி நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வந்தனர்‌. இருசக்கர வாகனத்தின்‌ மீது மோதியதில்‌ மூர்த்தி உள்ளிட்ட இருவரும்‌ தூக்கி வீசப்பட்டு பலத்த காயம்‌ அடைந்தனர்‌.
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
Published on

சேலம்:

ஆத்தூர் அருகே பெத்த நாயக்கன்பாளையத்தை அடுத்த முத்தாக்கவுண்ட னூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மூர்த்தி (வயது 28). சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சம்பந்தத்தின் மகன் கணேசன் (36). இவர்கள் இருவரும் சேலம் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இருவரும் நேற்று மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது எதிரே செங்கல்பட்டு மாவட்டம், ஊனமலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகன் சிலம்பரசன் (39) என்பவர் சொகுசு காரை ஓட்டி வந்தார்.

அந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூர்த்தி உள்ளிட்ட இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார் வழக்குப் பதிவு செய்து, மூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com