எடப்பாடி அருகே பள்ளி மாணவி பலாத்காரம் டிரைவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி அருகே பள்ளி மாணவி பலாத்காரம் டிரைவர் மீது  போக்சோ வழக்கு பாய்ந்தது
Published on

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.

இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com