பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் “தொன்மை மறவேல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
Published on

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் "தொன்மை மறவேல்" என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், தொன்மை மற்றும் வாழ்வின் முன்னேற்றம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பல்வேறு துறை வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

மேலும் மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதவி இயக்குநர் (நான் முதல்வன்) திறன் பயிற்சி, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மாவட்ட நூலகம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com