2-வது திருமணம் செய்த வாலிபர் சிறையில் அடைப்பு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கீர்த்திகாஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ள கீர்த்திகா அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கஜேந்தி ரன் (27) என்பவரை காத லித்து கடந்த ஆண்டு திரு மணம் செய்து கொண்டார்.
2-வது திருமணம் செய்த வாலிபர் சிறையில் அடைப்பு
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கீர்த்திகா (23).

பட்டதாரி

ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ள கீர்த்திகா அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கஜேந்தி ரன் (27) என்பவரை காத லித்து கடந்த ஆண்டு திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கீர்த்திகாவை விவாகரத்து செய்ய முடிவு செய்த கஜேந்திரன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2-வது திருமணம்

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஜேந்தி ரன் வேறு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கீர்த்திகா தனது தந்தையுடன் கஜேந்திரன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.

சிறையில் அடைப்பு

அப்போது கீர்த்திகா மற்றும் அவரது தந்தையை கஜேந்திரன் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கீர்த்திகா தார மங்கலம் போலீஸ் நிலை யத்தில் கஜேந்திரன் மீது புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com