அம்மாபேட்டையில் இன்று காலை சோகம் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

சித்ரா (50). இவர்களது மகன் தினகரன் (23), மருமகள் தீபிகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை பார்த்த போது சித்ரா வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
அம்மாபேட்டையில் இன்று காலை சோகம் கடன் தொல்லையால் பெண் தற்கொலை
Published on

சேலம்:

சேலம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சித்ரா (50). இவர்களது மகன் தினகரன் (23), மருமகள் தீபிகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது சித்ரா வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சித்ரா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com