மோட்டார்சைக்கிள் திருடனை துரத்தி பிடித்த வாலிபர்கள்

பேட்டரி கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை நேற்று இரவு மர்மநபர் ஒருவர் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.இதனைக் கண்ட பேட்டரி கடையில் இருந்த வாலிபர்கள் தப்பிச் செல்ல முயன்ற மர்மநபரை பிடிப்பதற்கு துரத்தி சென்றனர்.
மோட்டார்சைக்கிள்  திருடனை துரத்தி பிடித்த வாலிபர்கள்
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி தம்மம்பட்டி சாலையில் தனியார் தியேட்டர் எதிரே இயங்கி வரும் பேட்டரி கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை நேற்று இரவு மர்மநபர் ஒருவர் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.

தர்ம அடி

இதனைக் கண்ட பேட்டரி கடையில் இருந்த வாலிபர்கள் தப்பிச் செல்ல முயன்ற மர்மநபரை பிடிப்பதற்கு துரத்தி சென்றனர். அப்போது அவர் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மீது மோதி கீழே விழுந்தார். இருப்பினும் உடனே அவர் எழுந்து ஓடிச் சென்று அருகிலுள்ள தேங்காய் மண்டிக்குள் புகுந்து கொண்டார். அவரை சுற்றி வளைத்து பிடித்து வாலிபர்கள் தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் மோட்டார்சைக்கிள் திருடிய நபரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்

இது பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மோட்டார்சைக்கிள் திருடிய நபர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த அல்லிமுத்து (23) என்பதும், இவர் மீது ஏற்கனவே மோட்டார்சைக்கிள் திருடியதாக கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து வாலிபர் அல்லிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com