சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
தற்கொலைக்கு முயன்ற கார்த்தி என்பவரை போலீசார் மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்ற காட்சி.
தற்கொலைக்கு முயன்ற கார்த்தி என்பவரை போலீசார் மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்ற காட்சி.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் நாங்கள் அதே பகுதியில் 3 செண்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இந்த இடத்தை அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com