மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்துராஜ். இவரது மகன் ரமேஷ் (29), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக இறந்தாார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com