சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

சேலம்:

சேலம் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் பதுங்கி இருந்து வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா மொத்தமாக வாங்கி சிறிய பொட்டலங்களாக தயார் செய்து வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கருங்கல்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராசு (வயது 25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com