சேலம் சூரமங்கலத்தில் வீடு, பியூட்டி பார்லர் கடை உள்பட 2 இடங்களில் கொள்ளை முயற்சி

சிமிலி ஏஜென்ஸ் (வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வீராணம் அருகே உள்ள பருத்தி காடுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம் சூரமங்கலத்தில் வீடு, பியூட்டி பார்லர் கடை உள்பட 2 இடங்களில் கொள்ளை முயற்சி
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் காதர்கான் தெருவை சேர்ந்தவர் எபினேசர். இவரது மனைவி சிமிலி ஏஜென்ஸ் (வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வீராணம் அருகே உள்ள பருத்தி காடுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டில் இருந்து எதுவும் திருடு போகவில்லை.

மற்றொரு சம்பவம்

இதேபோல் சேலம் கந்தம்பட்டி பகுதியில் வரதராஜன் மனைவி ராஜாமணி என்பவர் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com