சேலம் பெருமாள்மலை அடிவாரத்தில்சந்தன மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்

முத்துராஜ் (வயது 27). இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்த 10 அடி உயரமும், 15 செ.மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தனம் மரம் வளர்ந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டினர்.
சேலம் பெருமாள்மலை அடிவாரத்தில்சந்தன மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்
Published on

சேலம்:

சேலம் பெருமாள்மலை அடிவாரம் கழுக்கன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 27). இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்த 10 அடி உயரமும், 15 செ.மீட்டர் சுற்றளவு கொண்ட சந்தனம் மரம் வளர்ந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டினர். இதனை பார்த்த முத்துராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சற்று தூரத்தில் வெட்டப்பட்ட சந்தன மரக்கட்டைகள் கிடந்தது. சந்தன மரம் நன்றாக முற்றினால் தான் வாசனை வீசும். ஆனால் வெட்டப்பட்ட மரத்தின் கட்டை முற்றாததால் அதிலிருந்து எந்த வாசனையும் வீசவில்லை. மர்ம நபர்கள் சுமார் 50 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை அங்கேயே வீசி விட்டு சென்று விட்டனர். இதனை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com