சேலம் அன்னதானப்பட்டியில் வீட்டில் தவறி விழுந்த முதியவர் சாவு

அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.கடந்த 3-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
சேலம் அன்னதானப்பட்டியில் வீட்டில் தவறி விழுந்த முதியவர் சாவு
Published on

சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். கடந்த 3-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com