இரும்பாலை அருகே மரத்தில் தூக்கு போட்டு பரோட்டா மாஸ்டர் தற்கொலை

மாரப்பன் (45). பரோட்டா மாஸ்டரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.கந்தமலை முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரும்பாலை அருகே மரத்தில் தூக்கு போட்டு பரோட்டா மாஸ்டர் தற்கொலை
Published on

சேலம்:

சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரப்பன் (45). பரோட்டா மாஸ்டரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மாரப்பன் நேற்று மதியம் அந்தப் பகுதியில் உள்ள கந்தமலை முருகன் கோவில் அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரப்பனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com