எடப்பாடி அருகே 17 வயது மகளுடன் பெண் மாயம்

செல்வராஜ் (47). இவரது மனைவி செல்வி (38) இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.இந்நிலையில் கடந்த 5-ந் தேதி செல்வி தனது மகளுடன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார்.
எடப்பாடி அருகே 17 வயது மகளுடன் பெண் மாயம்
Published on

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பூலாம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவரது மனைவி செல்வி (38) இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.

கட்டிடத் தொழிலாளியான செல்வராஜ் தற்போது திருப்பூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி செல்வி தனது மகளுடன் எடப்பாடி- பூலாம்பட்டி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். செல்வியும் கட்டிட கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5-ந் தேதி செல்வி தனது மகளுடன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்வி மற்றும் அவரது 17 வயது மகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com