

சேலம்:
சேலம்-சென்னை மெயின்ரோட்டில் ஆத்தூர் காட்டு கொட்டாய் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 65 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார், இதனை பார்த்த அந்த கிராம நிர்வாக அதிகாரி முனியப்பன் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து விச ாரணை நடத்தி வருகிறார்கள்.