செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 305 பேரின் லைசன்ஸ் ரத்து

சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 305 பேரின் லைசன்ஸ் ரத்து
Published on

சேலம்:

சேலம் சரகத்தில் அதி வேகமாக வாகனம் ஓட்டு வது, சிவப்பு விளக்கு மீறு வது, அதிகபாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொது மக்களை ஏற்றுவது போன்ற சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வரு கிறது. இதேபோல் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதை யில் வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இதனை அந்தந்த மாவட்ட போலீசார், விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். போதையில் வாகன ஓட்டியவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்க ளுக்கு போலீ சார் பரிந்துரை செய்கின்ற னர். மேலும் போதையில் வாகனம் ஓட்டு பவர்களுக்கு ரூ.10,000 அப ராதம் விதிக்கப்படுகிறது.

5 மாதங்களில்...

அந்த வகையில், கடந்த 5 மாதங்களில் சேலம் சரகத்தில் வாகன விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 175 டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதே போல் சேலம், தர்மபுரி மாவட்டத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 5 மாதத்தில் 305 பேரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com