சுப்ரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா

சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சூரசம்ஹாரத்தின்போது மகுடஞ்சாவடி சுப்ரமணிய சாமியை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்த காட்சி. 
சூரசம்ஹாரத்தின்போது மகுடஞ்சாவடி சுப்ரமணிய சாமியை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்த காட்சி. 
Published on

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருக்கல்யாணம்

கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (சனிக்கிழமை) மாலை வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் வள்ளி- தெய்வானை வசந்த் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் 6-ம் ஆண்டு குண்டம் தீ மிதி விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுப்ரமணிய சாமி ஆசி பெற விழா கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com