சேலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24).நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார்.
சேலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஜயகுமார் (24) சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஏ.வி.ஆர் ரவுண்டானா பைபாஸ் சாலையில் கொண்டலாம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய விஜயகுமார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தார். அந்த வழியில் சென்றவர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com