ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை சாரல் மழையுடன் பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஏற்காட்டில் காபி அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் காபி தோட்டங்களில் காபி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக காபி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பனி மூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com