சேலத்தில் மாவட்ட அளவிலான கட்கா விளையாட்டு போட்டி

சேலம் மாவட்ட அளவிலான கட்கா விளையாட்டு போட்டி சேலம் தமிழ்சங்க நூலக கட்டிட மாடியில் நடந்தது. இந்நிலையில் சேலத்தில் இன்று மாவட்ட அளவில் நடந்த போட்டியை செந்தில் பப்ளிக் பள்ளி தாளாளர் தீப்தி தனசேகர் தொடங்கி வைத்தார்.
சேலத்தில் மாவட்ட அளவிலான கட்கா விளையாட்டு போட்டி
Published on

சேலம்:

சேலம் மாவட்ட அளவிலான கட்கா விளையாட்டு போட்டி சேலம் தமிழ்சங்க நூலக கட்டிட மாடியில் நடந்தது.

பஞ்சாப் மாநில பாரம்பரிய கலையான கட்கா விளையாட்டு தற்போது தமிழகத்தில் பிரசித்தி பெற்று வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று மாவட்ட அளவில் நடந்த போட்டியை செந்தில் பப்ளிக் பள்ளி தாளாளர் தீப்தி தனசேகர் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் டாக்டர். சவுந்தரராஜன், திலகம், உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

இந்த விளையாட்டிக்கான ஏற்பாடுகளை கட்கா விைளயாட்டு சங்க மாவட்ட செயலாளர் மாங்க் பிரசாத் செய்திருந்தார். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com