மேட்டூரில் பயிற்சி காவலர்களுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்துரையாடல்

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடிய போது எடுத்த படம். 
மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடிய போது எடுத்த படம். 
Published on

மேட்டூர்:

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

மேலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், பயிற்சி காவலர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) விஜயகு மார், போலீஸ் கண்கா ணிப்பாளர்கள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர் சந்திர மௌலி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நாகராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜேஷ் ஆகியோர் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com