சேலம் குகையில் தண்ணீர் தொட்டியில் மிதந்த பெண் பிணம்

தாமரைச்செல்வி (வயது 53). இவர் இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார்.இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சேலம் குகையில் தண்ணீர் தொட்டியில் மிதந்த பெண் பிணம்
Published on

சேலம்:

சேலம் குகை ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 53). இவர் இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தாமரைச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com