தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவி மாயம்

பெரியசாமி மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
தாரமங்கலம் அருகே கல்லூரி மாணவி மாயம்
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி கிராமம் புதூர் காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெரியசாமி குடும்பத்தினர் அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com