உத்திரப்பிரதேச சாமியாரின் உருவப்படத்தை எரித்து தி.வி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாமியாரை கண்டிக்கும் வகையில் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தினர் தாரமங்கலம் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேசும்போது சனாதனத்தை ஒழிக்க பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர் வழியில் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார்.
உத்திரப்பிரதேச சாமியாரின் உருவப்படத்தை எரித்து தி.வி.க. கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

தாரமங்கலம்:

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என அறிவித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாமியாரை கண்டிக்கும் வகையில் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தினர் தாரமங்கலம் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உத்திரபிரதேச சாமியாரின் உருவ படத்தை எரித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி அஜித்குமார் தலைமையிலும். மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலையில் கே.ஆர் தோப்பூர் கண்ணன் தொடக்க உரை நிகழ்த்தினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேசும்போது சனாதனத்தை ஒழிக்க பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர் வழியில் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார்.

இது பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட தகவலைக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து பேசிய உத்திரபிரதேச சாமியாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் குடந்தை பாலன் நன்றி கூறினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com