மேட்டூரில் விழிப்புணர்வு ஊர்வலம்

மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்தார்.
விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.
விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

மேட்டூர்:

மேட்டூரில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

மேட்டூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணிக்கு, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா தலைமை வகித்தார். அரசு கலை கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய பேரணி, மாதா கோவில், மேட்டூர் நீதிமன்றம், எம்.எல்.ஏ அலுவலகம் வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தைச் சென்றடைந்தது. இதில் மேட்டூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் மதுவிலக்கு போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com