

சேலம்:
சேலம் மல்லமூப்பம் பட்டி அருகே உள்ள சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விக்னேஷ் (20) எலக்ட்ரிசன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தளவாய்பட்டி பஞ்சாயத்து பழனியாண்டவர் கோவில் அருகே உள்ள மணி (35) என்பவருக்கும் கடந்த மாதம் 22-ந் தேதி சீரியல் செட்டு போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள சிக்கன் கடை அருகே விக்னேஷ் நின்றிருந்தார். இதை பார்த்த மணி சிக்கன் வெட்டும் அரிவாளால் விக்னேஷை இடது காதுக்கு மேற்புறம் தலையில் வெட்டினார். இதில் நிலைகுலைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.