பேளூர் சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு

கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர்.
பேளூர் சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் செயல்படுத்தி வரும் 'அன்னசுரபி' திட்டத்தின் கீழ் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர். தொடர்ந்து வாரம் இருமுறை பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அன்னசுரபி திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுமென அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், மோதிலால் ஆகியோர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com