சேலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிமுதியவர் பலி

சந்திரசேகர் (55) இவர் நேற்று இரும்பாலை ரோடு காவடி பழனியாண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிமுதியவர் பலி
Published on

சேலம்:

சேலம் நரசோதிப்பட்டி உதயபுரி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (55) இவர் நேற்று இரும்பாலை ரோடு காவடி பழனியாண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த சந்திரசேகரன் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சூரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரசேகரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது மோதி சென்ற மோட்டார் சைக்கிள் எது என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com