மேட்டூர் நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேட்டூர் நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Published on

ேமட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதர், ஆணையாளர் (பொறுப்பு) சுகவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேட்டூர் காவிரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு சின்டெக்ஸ் டேங்க் அமைப் பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் தொடங்கிய வுடன், அ.தி.மு.க.வை சேர்ந்த நகர்மன்ற உறுப்பி னர்கள் கிருஷ்ணன், லாவண்யா, கலா, செல்வ ராணி உட்பட 5 பேரும் மேட்டூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொத்து வரி வசூலிப்பு நடவடிக்கை யில் வரி மேல்முறையீட்டுக் குழுவினரின் நடவடிக் கையால் நகராட்சிக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com