எடப்பாடி அருகே அடுத்தடுத்து விபத்துதொழிலாளி, மூதாட்டி சாவு

மாரியப்பன். இவரது மனைவி பெரியா (70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள எடப்பாடி-குமார பாளையம் சாலையை மேற்கில் இருந்து கிழக்காக கடக்க முயன்றார்.அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டார்.
எடப்பாடி அருகே அடுத்தடுத்து விபத்துதொழிலாளி, மூதாட்டி சாவு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள பூலா கவுண்டம்பட்டி வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பெரியா (70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள எடப்பாடி-குமார பாளையம் சாலையை மேற்கில் இருந்து கிழக்காக கடக்க முயன்றார்.

கார் மோதி பலி

அப்போது எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த கார் அதே வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதனை பார்த்த அவரது மகன் கந்தசாமி அவரை மீட்டு ஈேராடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தென்னை மரத்தான் வளைவு இலகூத்தூர் பகுதியை சேர்ந்தவர் காவேரி ( 67), தொழிலாளியான இவர் தனக்கு சொந்த மான ஆட்டை விற்பதற்காக நேற்று முன்தினம் இருப்பாளி சந்தைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். வன்னாங்குட்டை-இருப்பாளி ரோட்டில் சென்ற போது அவரது மகனின் மடியில் இருந்த ஆடு திடீரென துள்ளிதயதால் நிலை தடுமாறிய வாகனம் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட காவேரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ேசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிக்சசை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார், இது குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com